Header Ads

  • சற்று முன்

    திருவாடானையில் கோழி கழிவுகளை கொட்டுவதால் சுகாதார கேடு விளைகிறது, கண்மாய்கள் அழியும் அவல நிலை


    ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானை பகுதிகளில் அதிக அளவில் கண்மாய்கள், குளங்கள் உள்ளது. குறிப்பாக திருவாடானையை சுற்றி கட்மபாகுடி கண்மாய் சூச்சனி கண்மாய், மணிகண்டி கண்மாய்கள் உள்ளன. ஆண்டியவயல் கண்மாய்கள் உள்ளன. இந்த கண்மாய்களில் மழை காலங்களில் பெய்யும் நீரை சேமித்து விவசாயத்திற்கும் குடிக்கவும், மற்ற தைவைக்கும் விவசாயிகளுகம் பொது மக்களும் பயன்படுத்தி வந்தார்கள். இதில் திருவாடானை கண்மாய் பல மாதங்களுக்கு முன்பு தூர் வாரப்பட்டு கரைகள் வழுப்படுத்தப்படாமல் உள்ளது. அதே சமயம் மணிகண்டி, சூச்சனி, ஆண்டியவயல், கடம்பாகுடி கண்மாய்கள் பல வருடங்களாக தூர்வாரப்படாமல் உள்ளது.  இதனால் இந்த கணமாய்கள் நாயடைவில் தண்ணீர் தேங்கும் அளவு வெகுவாக குறைந்துள்ளது. மேலும் திருவாடானை டவுனில் உள்ள கறி கோழி கடைகள் அதிகம் உள்ளன. 

    இந்த கடைகளில் தேங்கும் கழிவுகளை திருவாடானை ஊராட்சி அதெற்கென்று தனியாக இடம் ஒதுக்கி அங்கு கொட்ட அறிவுறுத்தப்பட்ட நிலையில் ஒரு சிலர் வேண்டுமெனறே இரவு நேரங்களில் மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலை ஓரமாக உள்ள சூச்சனி கண்மாயில் கோழி கழிவுகளை கொட்டிவிட்டு செல்கின்றனர். இதனால் இப்பகுதியில் கடும் துற்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்று அபாயம் உள்ளது. இது பற்றி இப்பகுதி மக்கள் பல முறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எவ்வித ந்வடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் மழைகால்ங்களில் தண்ணீர் தேங்கினாலும் அந்த தண்ணீரைப் பயன்படுத்த முடியாத அவல நிலை ஏற்பட்டு விடும். ஆகவே மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad