செய்தியாளர் முத்து வேல் மீது கொலை வெறி தாக்குதல் : ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் கடும் கண்டனம் !
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது.
தூத்துக்குடி மாவட்டம். சாத்தான் குளத்தை சேர்ந்த முத்து வேல் என்பவர் பாலிமர் தொலைகாட்சியில் செய்தியாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடதக்கது. சாத்தான் குளம் அருகே தட்டார் மடம் காவல் ஆய்வாளர் கஜேந்திரன் அவர்கள் மீது எஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்கபட்டுள்ளது இந்த செய்தியை பாலிமர் தொலைகாட்சியில் வெளியிட்ட காரணத்தினால் நேற்று இரவு சுமார் 9 மணியளவில் செய்தியாளர் முத்து வேல் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய சண்முக நாதனை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வண்மையாக கண்டிக்கிறது.
இந்த செய்தினை பொருத்து கொள்ள முடியாத தட்டார் மடம் காவல் ஆய்வாளர் கஜேந்திரன் அவர்கள் தூண்டுதலின் பேரில் இந்த கொலை வெறி தாக்குகுதல் நடந்துள்ளது என சந்தேகம் எழுகிறது இதன் உண்மை தண்மையை கண்டறிந்து சம்பந்த பட்டவர்கள் மீது காலம் தாழ்த்தாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது .
முத்து வேல் மீது சரமாரியாக அரிவாள் வெட்டு கொலை வெறி தாக்குதலில் படுகாயம் அடைந்துள்ள செய்தியாளர் முத்து வேல் சாத்தான் குளம் அரசு மருத்துவ மனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேர்க்கபட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது . எனவே : தமிழகம் முழுவதும் தலை விரித்தாடும் கந்து வட்டி கும்பல் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டும். செய்தியாளர் முத்து வேல் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். பத்திரிக்கையாளர்களின் பாதுதிகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் கேட்டு கொள்கிறோம். என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை