Header Ads

  • சற்று முன்

    ராமநாதபுரதம் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விவசாய கடன் தள்ளுபடி லெட்டர் பேடால் பரபரப்பு,

    ராமநாதபுரம் மாவட்டம், திருவாடாடானை தாலுகா, திருவாடானை மட்டுமல்லா ராமநாதபுரம் மாவட்டம் முழுவதிலும் ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி படம் மற்றும் இந்திய அரசு முத்திரை மற்றும் பெயர் முகவரி அடங்கிய லெட்டர் பேடில் விவசாய கடன் தள்ளுபடி விண்ணப்பம் என்ற தலைப்பிட்டு வளை தளங்களில் வைராலாக பரவி வருகிறது. அதில் விவசாயின் பெயர், மற்றும் விவசாய கடன் விவரம், ஆதார் எண், பான் அட்டை எண், கடன்பெற்ற வங்கியின் பெயர், தொகை, ஐ.எப்.சி கோடு, நகை கடன் அட்டை எண் என்ற வாசகங்கள் அடங்கிய விண்ணப்பம் ஒன்று வைரலாக பரவிவருகிறது. அந்த லெட்டர் பேடில் குறிப்பிட்ப்பட்டுள்ள அணைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து தனியார் கொரியரில் அனுப்புகள் என்று உள்ளது. 

    இது குறித்து பாரளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனியிடம் கேட்ட போது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தி என்றும் யாரே விசமிகள் இவ்வாறு பொய்யான ஆவணத்தை தயார்  செய்து அதை வைரலாக பரப்பிவிட்டுள்ளனர். இந்த லெட்டர் பேடிற்கும் தன்னுடையது இல்லை யாரே மார்பிங்க் செய்து வதந்தியை பரப்பி விட்டுள்ளார்கள். பொது மக்கள் இதை யாரும் நம்பவேண்டாம் மேலும் இந்த பொய்யான  தகவலை வாட்ஸ்அப் மற்றும் சமூக கவளை தளங்களில் பரப்பியவர்கள் மீது உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டி ராமநாதபுரம் மாவட்ட சைபர் குற்ற பிரிவிலும், மாவட்ட காவல் கணகாணிப்பாளர் ஆபகியோரிடம் புகார் கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.வதந்தி பரப்பியவர்கள் மீது புகார் மனு கொடுத்துள்ளதாக எம்.பி தரப்பில் பதில் தெரிவித்தார். 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad