
காரைக்குடி தாலுகா,சங்கராபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ராஜீவ்காந்தி நகரில் கடந்த பத்து வருடங்களாக அரசு ஒதுக்கீடு செய்த இடத்தில் 35 குடும்பங்கள் வீடு கட்டி குடியிருந்து வருகிறார்கள். இக்குடியிருப்பிற்கு அடிப்படை வசதிகளான தெருவிளக்கு, குடிதண்ணீர், கழிப்பறை வசதிகள் போன்று எதுமே கிடையாது. பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கை கிடையாது. மேலும் இது குறித்து நீதிமன்றமும் பட்டா கொடுக்க பரிசீலிக்க கூறியுள்ளது. ஆனாலும் அரசு மெத்தனமாக செயல்படுவதை கண்டித்து காரைக்குடி தாலுகா அலுவலகத்தின் முன்பாக உலை வைத்து போராட்டம் நடத்தினார்கள்.தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்க தோழர்.சாத்தையா, கண்டனூர் முத்து, ராஜகோபால், சின்னகண்ணு,ஆறுமுகம்,ஏஐடியூசி பிஎல்.ராமச்சந்திரன்,ஏஆர்.சண்முகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். காரைக்குடி தாசில்தார் திரு.பாலாஜி அவர்கள் போராட்டக்காரர்களை அழைத்து பேசி,மாவட்ட ஆட்சியரிடம் தகவல் தெரிவித்து ஆவண செய்வதாக கூறினார்.
கருத்துகள் இல்லை