• சற்று முன்

    திருவாடானை அருகே சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.


    திருவாடானை அருகே பொது மக்களுக்கு சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது

    ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானை அருகே சின்ன கீரமங்கலத்தில் பொது மக்ககளுக்கு சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ராமநாதபுரம், மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு  உத்தரவின் பேரில் திருவாடானை வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் விழிப்புணர்வு முகாம் நடை பெற்றது. இந்த முகாமிற்கு திருவாடானை நீதிபதி பாலமுருகன் தலைமையிலும் வட்டார வளர்ச்சி அfவலர்' ஸ்டெல்லா லூர்து மேரி முன்னிலையில் நடை பெற்றது. இந்த சட்ட விழிப்புணர்வு முகாமில் பேசிய நீதிபதி சட்டம் அனைவருக்கும் சமம், சட்டத்தை அனைவரும் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். குழந்தைகளுக்கு 15 வயது வரை கட்டாயம் கல்வி பயில துணையிருக்க வேண்டும், சிவில், கிரிமினல் வழக்குகளை நடத்த பணவசதி இல்லாத நபர்கள் திருவாடானை நீதி மன்றத்தில் இயங்கிவரும் இலவச வட்ட சட்ட பணிகள் குழுவை அனுதலாம், இந்த வட்ட சட்ட பணிகள் குமு உச்ச நீதி மன்றம்  வரை இலவசமாக வழக்குகளை  நடத்தும் என்றும், சிறுவர்களுக்கு திருமணம் செய்வது சட்டத்திற்கு புறம்பானது என்று தெரிவித்தார். இந்த சட்ட வழிப்புணர்வு முகாமில் வழக்கறிஞர்கள் தனபால், விஜய் ஆனந்த் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து  கொண்டார்கள். 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad