Header Ads

  • சற்று முன்

    சென்னை - சேலம் 8 வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து செய்யாறு விவசாயிகள் கையில் கருப்பு கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தனர்.


    சேலம் - சென்னை இடையே மத்திய அரசின் சார்பில் 8 வழிச் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான நிலங்களை கையகப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இந்த திட்டத்திற்கு விவசாயிகள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி 8 வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்து தீர்ப்பளித்தார். இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து உள்ளது. மேல்முறையீட்டு மனுவை திரும்ப பெற வேண்டும் திருவண்ணாமலை மாவட்டம் உள்ளிட்ட இத்திட்டத்தால் பாதிக்கப்படும் மற்ற மாவட்டங்களான சேலம், தர்மபுரி காஞ்சீபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் ஆங்காங்கே கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
    இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா எருமைவெட்டி, முளகிரிப்பட்டு ஆகிய கிராமங்களில் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதால் விவசாயி தேவன் தலைமையில் விவசாயிகள் 50-க்கும் மேற்பட்டோர் திரண்டு எருமைவெட்டியில் உள்ளவயலில் இறங்கி கருப்பு கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதேபோல் சேத்துப்பட்டு அருகே தச்சாம்பாடி கிராமத்தில் உள்ள லட்சுமணன் என்பவர் நிலத்தில் 35-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்று கூடி கருப்பு கொடியை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மேல்முறையீடு செய்த மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

    இதுகுறித்து தகவலறிந்த சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் நரசிம்மன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

    செய்தியாளர் : திருவண்ணாமலை - மூர்த்தி

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad