Header Ads

  • சற்று முன்

    திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் நடத்துனர் மற்றும் சீருடை காவலருக்கும் கைகலப்பு

    திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் சென்னைக்கு செல்லும் பேருந்தில் கூட்டம் அலைமோதியது.  திருவண்ணாமலை டு சென்னை செல்லும் அல்ட்ரா டிலஸ் பேருந்தில் பேருந்து புறப்படும் இடத்திலே டிக்கெட் கொடுத்துவிட்டு நடத்துனர் இறங்கிவிட்டவர். இந்த பேருந்தில் ஓட்டுநர் மட்டுமே இருப்பர். மேலும் இந்த பேருந்தில் பாஸ், சீசன் டிக்கெட் எதுவமே செல்லாது. இந்நிலையில் திருக்கோவிலூர் சேந்த ரகோத்தமன் (29) ஆயுத படை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று இரவு சென்னைக்கு வருவதற்காக அல்ட்ரா டிலஸ் பேருந்தில் எறியுள்ளார். அப்போது நடத்துனர் வடிவழகன் (49) இவருக்கும் ரகோத்மனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த பேருந்தில் பாஸ் எதுவும் செல்லாது என்று கூற வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. மேலும் ஆயுத படை காவலர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது .இறுதியில் ரகோத்மனை பிடித்து திருவண்ணாமலை பேருந்து அலுவகத்தில் மேல் சட்டை இன்றி உட்கார வைத்தனர், பிறகு திருவண்ணாமலை கிழக்கு  காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். திருவண்ணாமலை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையில் போலீசார் பஸ் நிலையத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து போலீசார் போக்குவரத்து ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ரகோத்தமனை கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் இது குறித்து வடிவழகன் திருவண்ணாமலை கிழக்கு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் பல மணி நேரம் போக்குவரத்து ஸதம்பிதது .

    செய்தியாளர் : திருவண்ணாமலை - மூர்த்தி

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad