குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

கள்ளக்காதல் மோகத்தால் பெற்ற மகனையே கள்ளக்காதலுடன் சேர்ந்து கொன்று புதைத்த கொடூரம்.


வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டை அருகே கள்ளக்காதல் மோகத்தால் பெற்ற மகனையே கள்ளக்காதலுடன் சேர்ந்து வீட்டில் கொன்று உடலை பாலாற்றில் புதைத்த கொடூரம் அரங்கேறியுள்ளது.வாலாஜாப்பேட்டை அடுத்த பாக்குபேட்டை பகுதியை சேர்ந்தவர் காவியா.இவருக்கும் சிப்காடு பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான ராஜேந்திரன் என்பவருக்கும் திருமணமாகி 7 ஆண்டுகள் ஆன நிலையில் தருண்(6) என்ற ஆண்குழந்தை உள்ளது.

இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 3 ஆண்டுகளாக ராஜேந்திரனும் காவியாவும் பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் காவியாவிற்கு இராணிப்பேட்டை இராஜீவ் காந்தி நகர் பகுதியில் வசித்து வரும் தியாகராஜன் என்பவருடன் நட்பு ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக உருவெடுத்துள்ளது.இந்த மோகத்தால் வீட்டை விட்டு வெளியேறிய காவியா கள்ளக்காதலனான தியாகராஜனை கடந்த ஜனவரி 1ம் தேதியன்று திருமணம் செய்து கொண்டு வாலாஜாப்பேட்டை பகுதியில் உள்ள பெல்லியப்பா நகரில் வாடகை வீடு எடுத்து தங்கியுள்ளார்.நாளடைவில் கள்ளக்காதலுக்கு தருண் (6) இடையூறாக இருப்பதாக கருதிய கள்ளக்காதல் ஜோடியினர் தருணை நீரில் மூழ்க வைத்து கொலை செய்ததோடு உடலை நண்பர் ஒருவருடன் உதவியோடு பாலாற்றில் புதைத்துள்ளனர்.

இது குறித்து விசாரணை மேற்கொண்ட வாலாஜாப்பேட்டை போலீசார் காவியா மற்றும் தியாகராஜனை கைது செய்து அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் குழந்தையின் உடலை தோண்டி எடுக்க உள்ளனர் .கள்ளக்காதல் மோகத்தால் பெற்ற மகனையே கள்ளக்காதலுடன் சேர்ந்து கொலை செய்து விட்டு உடலை பாலாற்றில் புதைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துரையிடுக

புதியது பழையவை

Ads

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech

வழக்கறிஞர்களுக்கான 'Ready-to-File' டிராஃப்டிங் சேவை! சிவில் & BNS, BNSS, BSA வரைவுகளை உடனே பெறலாம்.

Jurisprudence Legal Tech LLP

Jurisprudence Legal Tech LLP

சிவில் மற்றும் BNS, BNSS, BSA வழக்குகளுக்கான Ready-to-file டிராஃப்டிங் தீர்வுகள்.