10 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து AISF - AIYF சார்பில் ஜூன் 7ல் தமிழகம் தழுவிய போராட்டம்
கோரிக்கைகள்:
1. அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தத்துக் கொடுக்கும் முடிவினை கைவிடு!
2. அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளை அருகாமைப் பள்ளிகளாக அறிவித்திடு!
3. அரசுப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களை உடனே நிரப்பு!
4. அரசு தொடக்கப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகளை தொடங்கிடு!
5. தனியார் பள்ளிகளுக்கு அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடு!
6. மாணவர் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் அரசுக் கல்லூரிகளை புதிதாக தொடங்கிடு!
7. அரசுக் கல்லூரிகளில் பாடப் பிரிவுகளையும், மாணவர் சேர்க்கைக்கான இடங்களையும் அதிகப்படுத்திடுக!
8. SC, BC, MBC மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைகளை தடையின்றி வழங்கிடு.
9. போராடிய ஆசிரியர்களை பழிவாங்கும் விதமாக பதவி உயர்வு கிடையாது என்னும் அரசின் முடிவினை கைவிடு.
10. அரசு மாணவர், மாணவிகளின் விடுதிகளை மேம்படுத்திடு!
என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில்
அனைத்திந்திய மாணவர் பெருமன்றம்(AISF)-அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் (AIYF) வட சென்னை சார்பாக DPI வளாகத்தை வருகிற வெள்ளி 07.06.2019 காலை 11.30 மணி அளவில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இப்போராட்டத்தில் AIYF தேசிய பொதுச்செயலாளர் தோழர் இரா.திருமலை, மாநிலத்தலைவர் த.கு.வெங்கடேஷ் அவர்களும் AIYF மாநில துணைச் செயலாளர் இரா.இராமசாமி வட சென்னை மாவட்டத்தலைவர் த.அன்பரசு ,மாவட்டத் துணைச் செயலாளர் பிரேம்குமார் , மாவட்டத் துணைத் தலைவர் தணிகைவேல் மற்றும் மாணவர்களும் இளைஞர்களும் ஆகியோர் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.
கருத்துகள் இல்லை