பாரதிக்குக்கு காவி டர்பனா - பாரதி முற்போக்கு வாலிபர்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
பிளஸ் 2 தமிழ் பாடப்புத்தக அட்டையில் காவிதலைப்பாகையுடன் தேசிய கவிபாரதியாரின் உருவப்படம் வெளியானதற்குஎதிர்ப்பு தெரிவித்து எட்டயபுரம் பஸ் நிறுத்தம் முன்பு பாரதி முற்போக்கு வாலிபர் சங்கம்சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்துக்கு பாரதி முற்போக்குவாலிபர் சங்கத்தின் தலைவரும்,சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமானசோ. ராஜேந்திரன் தலைமை வகித்தார்.பாரதி முற்போக்கு வாலிபர் சங்க செயலாளர்மு.மணிபாரதி, பாரதி ஆய்வாளர் இளசைமணியன் ஆகியோர் முன்னிலைவகித்தனர். தேசிய கவி பாரதியாரையும் அவரது கருத்துக்களையும் மாணவ மாணவியர்களுக்கு அறிமுகப்படுத்துவதுஎன்ற பெயரில் காவி தலைப்பாகையுடன் பாரதியின் படத்தை பிளஸ் 2 தமிழ்பாடப்புத்தகத்தின் அட்டையில் பள்ளிகல்விதுறை வெளியிட்டிருப்பதை கண்டித்தும்,பாரதியை தவறாக சித்தரித்து வெளியிட்டபிளஸ் 2 தமிழ் பாடபுத்தகத்தை திரும்பபெற்று பாரதியை உரிய முறையில் மாணவமாணவியர்களுக்கு இனம் காட்ட தக்கநடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழகஅரசை வலியுறுத்தி கண்டன முழக்கமிட்டு உரையாற்றினர்.
கூட்டத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற செயலர் வ. பாலமுருகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் சேது, தமிழ்நாடு விவசாய சங்கம் மாநில துணைச் செயலாளர் நல்லையா, இந்திய கலாச்சார நட்புறவு கழகம் தமிழரசன், ஏஐடியுசி ஹரி மற்றும் தொ.மு.சி. ரகுநாதன் நூலக பாரதி ஆய்வு மைய உறுப்பினர்கள்,தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றநிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை