• சற்று முன்

    ஒரு வாரம் குடிநீர் கிடைக்காததால் வேங்கிக்கால் மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்


    திருவண்ணாமலை வேங்கிக்கால் மின்நகரில் 1 முதல் 7 தெருக்களில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வரவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து இன்று காலை 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிகுடங்களுடன் வேலூர் ரோட்டில் உள்ள பூமாலை வணிக வளாகம் அருகே சாலை மறியல் செய்தனர். சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவலறிந்த கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, வட்டார வளர்ச்சி அலுவலர் பிரகாஷ், ஊராட்சி செயலாளர் உமாபதி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து பெண்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad