மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க ரஜினி, கமலுக்கு அழைப்புவிடுத்ததாக தகவல்
பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு நடிகர் ரஜினிகாந்துக்கும், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது .பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்த நதிகள் இணைப்பு என்ற வாக்குறுதியை ரஜினிகாந்த் பாராட்டி இருந்தார். அதேபோல் மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றதற்காக நரேந்திரமோடிக்கு ரஜினிகாந்த் வாழ்த்து கூறி இருந்தார். இந்த நிலையில் வரும் 30ஆம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில், பிரதமராக மோடி பதவியேற்க உள்ள நிலையில், இதில் பங்கேற்குமாறு ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் நாடாளுமன்ற தேர்தலில் கணிசமான வாக்குகளை வாங்கிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை