இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 சட்டமன்ற உறுப்பினர்கள் நாளை பதவி ஏற்பு
இடைதேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்எல்ஏக்கள் 13 பேர் வரும் 28 ஆம் தேதி பதவியேற்க உள்ளனர். 22 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக 13 தொகுதிகளிலும், அதிமுக 9 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் திமுக எம்எல்ஏக்கள் 13 பேரும் வரும் 28 ஆம் தேதி தலைமை செயலகத்திலுள்ள சபாநாயகர் அறையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பதவியேற்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சட்டப்பேரவையில் திமுகவுக்கு 88 எம்எல்ஏக்கள் இருந்த நிலையில் தற்போது 101 ஆக அதிகரித்துள்ளது.
கருத்துகள் இல்லை