திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் தற்காலிக குடிநீர் தொட்டி அமைப்பு
திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் குடீநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடிநீர் தொட்டிகள் தண்ணீர் இன்றி உள்ளதாக கடந்த நில நாங்டகளாக பொது மக்கள் குற்றசாட்டு தெரிவித்த வந்தனர். குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும், மேலும்,தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர நகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணிகள் கோரிக்கை வைத்திருந்தனர்.
தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் திருவண்ணாமலை மத்தியப் பேருந்து நிலையத்துக்கு வந்து செல்கின்றனர். இந்தப் பேருந்து நிலையத்தில் விழுப்புரம், திருச்சி பேருந்துகள் நிற்கும் இடத்தில் உள்ள ஒரே ஒரு குடிநீர்த் தொட்டியில் தண்ணீர் இல்லை என்று கோரிக்கை வைத்திருந்தனர். இதையடுத்து, அந்த பகதியில் தற்கால குடிநீர் தொட்டி அமைத்து, பயணிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது என்று பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை