திருவண்ணாமலையில் உலக புகையிலை ஒழிப்பு தினம் கொண்டாடப்பட்டது
உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு திருவண்ணாலையில் பிரஜா பிதா பிரம்மகுமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் சார்பில் புகையிலை ஒழிப்பு தின பேரணி நடைபெற்றது
திருவண்ணாமலையில் நடைபெற்ற இந்த புகையிலை ஒழிப்பு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார் பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து புறப்பட்டு அண்ணா ஆர்ச் பஸ் நிலையம் பெரியார் சிலை அண்ணா , காந்தி சிலை சின்ன கடை வீதி ராதா லாட்ஜ் ரவுண்டானா முடிவடைந்தது , வித்யாலய இயக்குனர் சகோதரி உமா தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணியில் 50 இரு சக்ர வாகனங்களில் ஏராளமானோர் கலந்து, கொண்டனர் முடிவில் பஸ் நிலையத்தில் விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது
செய்தியாளர் :திருவண்ணாமலை - மூர்த்தி
கருத்துகள் இல்லை