Header Ads

  • சற்று முன்

    தேங்கி கிடக்கும் குப்பை கழிவுகளால் தொற்று நோய் பரவும் அபாயம் - கல்லூர் ஊராட்சி அலட்சியம் - நடவடிக்கை எடுக்குமா ?


    திருவாடானை தாலுகா, கல்லூர் ஊராட்சிக்குட்பட்ட பாரதிநகர் வளர்ந்து வரும் ஊராகும். இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சொந்த வீடு கட்டி வசித்து வருகிறார்கள். பாரதிநகரில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பாரதிநகர் பேரூந்து நிறுத்தம், தாசில்தார் குடியிருப்பு எதிபுறம் மற்றும் முக்கிய இடங்களில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த குப்பை தொட்டிகளில் இருந்துகுப்பைகளை தினமும் அகற்றாமல் அப்படியே விட்டுவிடுவதால் நிரம்பி வழிவதோடு ஆங்காங்கே சிதறிகிடக்கிறது. 

    எப்போதாவது ஒரு தடவை இந்த குப்பைகளை குவித்து ஆங்காங்கே தீ வைக்கப்படுகிறது. இதனால் பொது மக்களுக்கு மூச்நு தினறல் ஏற்படுகிறது. திருவாடானையில் இயங்கிவரும் பேக்கரிக்கு பாரதிநகரில் இருந்து தயாரிக்கப்படும் பண்டங்கள்தான் அனுப்ப்படுகிறது. அப்படி தயாரிக்கப்படும் பொழுது ஏற்படும் கழிவுகள் மற்றும் கெட்டுப்போன பண்டங்களையும் இந்த பேரூந்து நிறுத்தம் அருகே உள்ள குப்பை தொட்டியில் கொட்டுவதால் துற்நாற்றம் வீசுகிறது.

    திடக்கழிவு மேலாண்மை சார்பில் கட்டப்பட்ட குப்பை கிடங்கு பயணற்று கிடக்கிறது. குப்பைகளை அள்ளுவதாக பில் எடுக்கப்படுவதாக இப்பகுதி மக்கள் குற்ம் சாட்டுகின்றனர். குப்பைகளை அள்ளாமல் விட்டுவிடுவதால் துறநாற்றம் வீசுவதோடு நோய் தொற்று அபாயமும் ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இந்த குப்பை கழிவுகளால் பாரதிநகர் பேரூந்து நிறுத்தம் அருகே பேரூந்திற்கு காத்திற்கும் பொழுது ஏற்படும் துற்நாற்றத்தால் நிற்க கூட அச்சப்படுபவதாக இப்பகுதி மக்கள் தெரிவித்தார்கள். எனவே மாவட்ட நிர்வாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும என கோரிக்கை வைத்தார்கள்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad