Header Ads

  • சற்று முன்

    நாளை நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை என்பதால் அசம்பாவிதம் எதுவும் நிகழாமல் இருக்க காவல் துறைக்கு உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை


    நாட்டின் பல்வேறு இடங்களில், வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, வன்முறை வெடிக்கும் ஆபத்து இருப்பதாக எச்சரித்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சகம், உடனடியாக பாதுகாப்பை பலப்படுத்துமாறு அறிவுறுத்தியிருக்கிறது.  நாடு முழுவதும், மக்களவை தேர்தல், சில மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல், இடைத்தேர்தல் ஆகியனவற்றில் பதிவான வாக்குகள், காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன. இந்நிலையில், அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், உள்துறை செயலாளர்கள், டிஜிபிக்களுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருக்கிறது. அதில், தங்களுக்கு கிடைத்த தகவலின்படி, வாக்கு எண்ணிக்கையின்போது, பல இடங்களில் வன்முறை வெடிக்கும் ஆபத்து இருப்பதாக, உள்துறை அமைச்சகம் கூறியிருக்கிறது.

    எனவே, அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும், சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டி, பொது அமைதியை உறுதிப்படுத்துவதில், தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை மையங்களை சுற்றியே, வன்முறை நிகழக் கூடும் என்பதால், அம்மையங்களைச் சுற்றிலும், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் உத்தரவிட்டிருக்கிறது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad