Header Ads

  • சற்று முன்

    மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கண்ணகி வேடமிட்டு நீதி கேட்டு வந்த பாரதி கண்ணம்மா


    மதுரை, திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட திருநங்கை பாரதி கண்ணம்மா வேட்பு மனு நிராகரித்ததால் கண்ணகி வேடத்தில் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு

    கண்ணகி வேடத்தில் வந்த பாரதி கண்ணம்மா மாவட்ட ஆட்சித் தலைவர் நாகராஜனிடம் புகார் மனு கொடுத்தார்.

    மதுரை திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில்  வேட்புமனு பரிசீலனை நாளான நேற்று அனைத்து வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது அப்பொழுது சுயேட்சை வேட்பாளர் திருநங்கை பாரதி கண்ணம்மா கண்ணம்மாவின் வேட்புமனு சரியாக முன் மொழியாத காரணத்தால் நிராகரிக்கப்பட்டது என்று அறிவிக்கப்பட்டது. இதனால் கோபமடைந்த  இது பாரதி கண்ணம்மா மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு கண்ணகி வேடத்தில் நீதி கேட்பது போல் வந்து ஆட்சித் தலைவரிடம் மனு கொடுத்து விட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அதில்  பல முறை திருப்பரங்குன்றம் தேர்தல் நடத்தும் அலுவலரான பஞ்சவர்ணத்திடம் மனுவில் ஏதாவது பிரச்சினை இருக்கிறதா? என கேட்டேன் அப்பொழுது கூட அவர்கள் எதுவும் சரியாக பதில் சொல்லவில்லை.

    முன் மொழியும் மனுவில் சரியாக கையெழுத்திடவில்லை  என கூறியுள்ளார்கள் எனவே இதற்கு நீதி கேட்டு நான் நீதிமன்றம் செல்ல இருப்பதாகவும் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் இதற்கு நீதி வேண்டும் என்றும் கோரியும் மனு கொடுத்துள்ளேன் என்றார் 

    செய்தியாளர்  :  வி காளமேகம் -  மதுரை 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad