Header Ads

  • சற்று முன்

    அல்டிமேட் ஸ்டார் அஜீத் குமாரின் 48 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை வியாசர்பாடியில் நலத்திட்ட உதவிகள் மற்றும் மருத்துவ முகாம்கள் நடைபெற்றன


    வியாசர்பாடி கணேசபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திரைப்பட நடிகரும் சண்டை பயிற்சியாளருமான மகாநதி சங்கர் கலந்துகொண்டு இலவச மருத்துவ முகாம் ரத்ததான முகாமினை தொடங்கி வைத்தார்

    பின்னர் 480 பேருக்கு மரக்கன்றுகளை வழங்கி மோர் பந்தல் மற்றும் குளிர்பானங்கள் வழங்கி அஜித்குமாரின் பிறந்தநாளை கொண்டாடினர் இதனையடுத்து செய்தியாளர்களை  சந்தித்த  நடிகர் மகாநதி சங்கர் நடிகர் அஜித்தின் தீனா படத்தில் இணைந்து நடித்த போது நான் அழைத்த தல என்ற பெயராலேயே இப்போது உலகம் முழுவதும் அப்பெயர் பெரிய அளவில் பேசப்படுகிறது இது எனக்கு பெருமைக்குரியதாக உள்ளது என கூறினார் நடிகர் அஜித் குமார் என்பவர் எளிமையின் தோற்றம் நிதானத்திலும் பொறுமையிலும் அவரிடம் இளைஞர்கள் நிறைய கற்க வேண்டும் என்றும் அவருடன் நிறைய படங்கள் சேர்ந்து நடித்துள்ளேன் இளைஞர்களும் மாணவர்களும் அவரவர்களின் குடும்பத்தை கவனித்து சிறப்பாக பணியாற்றி உழைக்க வேண்டும் என்பதே நடிகர் அஜித்தின் குறிக்கோள் இதனை இளைஞர்கள் பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்...

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad