இரு வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்த பெத்து விலக்கு அருகே சாத்தூரிலில் இருந்து வந்த சொகுசு காரில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஒரு குழந்தை உட்பட 8 பேர் வந்தனர். காரின் முன் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்தது அப்போது பொருட்களை ஏற்றி வந்த மற்றொரு வாகனம் நேருக்கு நேர் மோதி கொண்டதில் காரில் வந்த 8 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த சாத்தூர் தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை