நினைவஞ்சலி செலுத்த அனுமதி மறுத்த காவல் துறை
கடந்த இதே நாளில் தூத்துக்குடியில் துப்பாக்கிசூட்டில் படுகொலை செய்யப்பட்டு இறந்தவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்த திட்டமிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் திருவண்ணாமலை பஸ்நிலையம் அருகில்உள்ள அறிவொளி பூங்கா அருகே காலை 10.00அளவில் கூடினோம். சிறிது நேரத்தில் அங்கு வந்த போலிஸ் பட்டாளம் அஞ்சலி நடத்தகூடாது கவர்ன்மெண்ட் உத்ததரவு எனமறுத்து நடத்தவே விடவில்லை. இறுதியாக தமிழ்மின்நகரில் உள்ள சிஐடியு அலுவலகம் அருகில் நடத்தி முடித்தோம்.
எடப்பாடி அரசு இந்நிகழ்சியை தடுப்பதன் மூலம் இப்படுகொலையினை மூடி மறைத்துவிட முடியாது. மக்களிடம் மறக்கவைப்பது உங்கள் வேலையாக இருந்தாலும் அதை நினைவுபடுத்துவது எங்கள் வேலை. மகாத்மா காந்தியை படுகொலை செய்த கோட்சேவுக்கு ஜெயந்தி நடத்த அனுமதிக்க படுகிறது மக்களுக்காக வீதியில் போராடி உயிரிழந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு மறுக்கப்படுகிறது என்னதேசம் இது.
செய்தியாளர் - திருவண்ணாமலை - மூர்த்தி
கருத்துகள் இல்லை