Header Ads

  • சற்று முன்

    திருவாடானையில் வைகாசி விசாக தேரோட்டம் வெகு விமர்சியாக நடைபெற உள்ளது

    ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா,  திருவாடானையில் ஆதிரெத்தினேஸ்வரர் கோவில் வைகாசி விசாக விழா தேராட்டம் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில் சின்ன தேர். பெரிய தேர் என இரண்டு தேர்களையும் புதுப்பித்து அலங்கரிக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்றுவருகிறது.

    திருவாடானையில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட ஆதிரெத்தினேஸ்வரர் ஆலயத்தின் வைகாசி விசாக விழா கடந்த மே மாதம் 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை மறுநாள் மே 17ம் தேதி நடக்க தோரட்டம் உள்ளது. அருள்மிகு ஆதிரெத்தினேஸ்வரர் பிரியாவிடையுடன் அமர்ந்த தேரும்,  அருள்மிகு சிநேகவல்லி அம்மன் மற்றொரு தேரிலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பளிப்பார் . இதற்காக தேர்களை அலங்கரிக்கும் பணிகள் கோவில் பரம்பரை தொழிலாளர்கள் ஈடுபட்டுவருகிறார்கள். இரு தேர்களையும் தண்ணீரால் கழுவி சுத்தம் செய்தனர். அதன் பின்னர் திரைசீலைகளால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. இந்த வைகாசி விசாக தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வதால் காவல் துறையினர் பாது காப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad