Header Ads

  • சற்று முன்

    மதுரை மாநகராட்சி ஊழியர்கள் அலட்சியம் - நெடுஞ்சசாலையில் வாகன ஓட்டிகள் அவதி


    மதுரை பைபாஸ் சாலை அருகே போடி லயன் அருகே காவியின் அப்பார்ட்மெண்ட் எதிரே உள்ள குப்பைத் தொட்டி ஒன்று உள்ளது இதில் மாநகராட்சி ஊழியர்கள் பாதி குப்பையை எடுத்துவிட்டு மீதி குப்பையை எரித்து விட்டு செல்கிறார்கள் இதனால் புகைமண்டலம் ஆகி மூச்சுத் திணறல் ஏற்படுகிறது 

    இதனால் மாசுபடுகிறது பின் அந்த வாகனத்தை தடுத்து நிறுத்திய போது ஏன் குப்பைகளை தீ வைத்தியர்கள் என்று கேட்டதற்கு வாகனத்தில் இடமில்லை என்று சொன்னார்கள் அடுத்த முறை வந்து எடுத்துச் செல்ல வேண்டியது தானே என்று கேட்டதற்கு அப்படி எங்களுக்கு சொல்லவில்லை என்று பின் மாற்றி மாற்றி முன்னுக்கு பின் முரணாக பேசினார் நான் உடனடியாக மாநகராட்சி ஆணையாளருக்கு தகவல் கொடுப்பேன் என்று சொன்னவுடன் உடனடியாக சென்று தீயை அணைக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர் மேலும் மாநகராட்சி ஊழியர்கள் ஒரு வருத்தமான செய்தியும் ஒன்று சொன்னார்கள் எங்களுக்கு போதுமான உபகரணங்கள் பெறுவதற்கு கொடுப்பதில்லை எனவும் இதனால் தான் நாங்கள் விட்டுச் செல்வதாகவும் என சொல்கிறார்கள் 

    அது மட்டுமல்லாது எடுத்துச் செல்லும் வாகனம் விவசாய பயன்பாட்டிற்கு மட்டும் என எழுதி உள்ளது டிராக்டர் சொந்தப் பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்தக்கூடிய என் உள்ளது ஆனால் குப்பை அள்ளுவதற்கு செல்வதற்கு எப்படி அனுமதி கொடுத்தார்கள் மேலும் டிரெய்லரில் எந்த வாகனம் என்னும் இல்லை நாளை விபத்து எதுவும் ஏற்பட்டால் நஷ்ட ஈடு யார் தருவது இது மாநகராட்சி அதிகாரிக்கு தெரிந்த நடக்கிறதா தெரியாமல் நடக்கிறதா புரியாத புதிராக உள்ளது மேலும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் இது போன்ற வாகனங்களை பறிமுதல் செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கிறார்கள் 

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad