Header Ads

  • சற்று முன்

    உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காரைக்கால் கிளை சிறைச்சாலை கைதிகள்


    காரைக்கால் கிளைச்சிறையில் 38 கைதிகள் உள்ளனர் . அவர்களில் 15 பேர் தண்டனை பெற்ற கைதிகள் உள்ளனர் . இந்த கிளைச்சிறை 1828ஆம் ஆண்டு பிரெஞ்ச்சு ஆட்சியின் போது கட்டப்பட்டது . இதனால் அதன் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் கைதிகளுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் நோக்கிலும் காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கடந்த 2வாரங்களுக்கு முன்பு காரைக்கால் கிளைச்சிறையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது . அப்போது அங்கிருந்த கைதிகளிடம் பேசி , அதனடிப்படையில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது . அந்த அறிக்கையில் பாண்டிச்சேரி சப் ஜெயில் சட்டப்படி 3மாதத்திற்கு மேல் தண்டனைப் பெற்ற கைதிகளை தொடர்ந்து சப் ஜெயிலில் வைத்திருக்கக் கூடாதென்றும் சென்ரல் ஜெயிலுக்கு அவர்களை மாற்றியாக வேண்டுமென்றும் கூறப்பட்டிருந்தது . G + 

    இந்நிலையில் தாங்கள் வெளியூரில் உள்ள ஜெயில்களுக்கு மாற்றப்படவிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து காரைக்கால் கிளை சிறையிலுள்ள தண்டனைக்கைதிகள் 15 பேரும் இன்று காலை முதல் ஜெயிலுக்குள் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டனர் . ஜெயில் அதிகாரிகள் அவர்களிடம் பேச்சு நடத்தியும் எந்த பயனுமில்லை . ஜெயிலுக்குள் அமர்ந்து ஆட்சியர் வரும் வரை தாங்கள் போரட்டத்தை கைவிடப்போவதில்லையெனக் கூறி அவர்கள் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் . இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது . இதை தொடர்ந்து இன்று நண்பகல் அங்கு வந்த மாவட்ட ஆட்சியர் விக்ராந்த்ராஜா உண்ணாவிரத்தில் ஈடுபட்டிருந்த தண்டனைப்பெற்ற கைதிகளிடம் பேச்சு நடத்தினார் . அப்போது ஜெயிலில் அடிப்படை வசதிகள் மற்றும் கட்டுமானப்பணிகள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டதாகவும் இதில் உடன்பாடு ஏற்பட்டு கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டதாகவும் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் விக்ராந்த்ராஜா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் . ஆனால் தண்டனைப்பெற்ற கைதிகளை வெளியூர் சிறைகளுக்கு மாற்றுவதற்கு சமூக நல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன . அவர்கள் உள்ளூரில் இருந்தால்தான் அவர்களின் குடும்பத்தினர் சந்திக்க முடியும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர் . -

     செய்தி வி.காளமேகம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad