திருவாடானை அருள்மிகு ஆதிரெத்தினேஸ்வரர் ஆலயம் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது.
திருவாடானையில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட சிவன் கோவில் ஸ்ரீ ஆதிரெத்தினேஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் வராலாற்று சிறப்புமிக்க ஆலயமாக விளங்குகிறது. இந்த கோவிலானது பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட 14 சிவ ஸ்தலங்களில் 8வது ஸ்தலாமாக விளங்குகிறது. ஸ்ரீ ஆதிரெத்தினேஸ்வரர் கோவில் வைகாசி விசாக திருவிழா கடந்த மே 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. சுதனை தொடர்ந்து ஒவ்வோர் நாளும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஒவ்வோர் நாளும் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பல்லாக்கு வாகனம், பூத வாகனம், கைலாச வாகனம், யானை வாகனம், வெள்ளி ரிஷப வாகனம், இந்திர விமான வாகனம், குதிரை வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்காக்கு அருள்பாலித்தார். வெள்ளிகிழமை ஒன்பதாம் நாள் திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது.
முன்னதாக ஸ்ரீ சினேகவல்லி அம்மன் உடனாய ஸ்ரீ ஆதிரெத்தினேஸ்வரர் சுவாமிகள் கோவிலில் இருந்து புறப்பட்டு தேருக்கு வந்தடைந்தனர். இரண்டு தேர்களில் பெரிய தேரில் ஸ்ரீ ஆதிரெத்தினேஸ்வரர் பிரியாவிடையுடன் சின்ன தேரில் சினேகவல்லி அம்மன் வீற்றிருந்தனர். இரண்டு தேர்களும் ஒன்றன் பின் ஒன்றாக பகதர்கள் வடம் பிடித்து இழுத்து திருவாடானை நான்கு தெருக்கல் வழியாக வந்து இரண்டு தேர்களில் வீதி உலா வந்தனர். அருள்மிகு ஆதிரெத்தினேஸ்வரர் திருத்தேர் களில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்கள். முன்னதாக திருவாடானை நீதிபதி பாலமுருகன், காவல் துணைக்கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ், தேவஸ்தான அதிகாரி மற்றும் பலர் தேர் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைதார்கள். இந்த தேரோட்டத்தில் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேர்வடம் பிடித்து இழுத்தனர்.
இரண்டு தேர்களும் நிலைக்கு வந்த பிறகு சுவாமிகள் தேரில் இருந்து இறக்கி தேர்வந்த தடம் பார்க்கும் நிகழ்வை தொடர்ந்து சுவாமி கோவிலுக்கு வந்தடைந்தார். நாளை தீர்த்தவாரியுடன் விழா நிறைவுபெறுகிறது. இந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்காண பொது மக்கள் கலந்துகொண்டனர்.









கருத்துகள் இல்லை