திருவாடானை அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு பாய்மர படகுப் போட்டி நடைபெற்றது
திருவாடானை தாலுகா தொண்டி அருகே நம்புதாளையில் புதுக்குடியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வள்ளி, ஸ்ரீதேவசேனா சமேத ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு வைகாசி பெருவிழா கடந்த மே 9ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அதனை தொடர்ந்து ஒவவோர் நாளும் மாலை 10 நாட்களு சிறப்பு ஹோமமும் அதனை தொடர்ந்து மே 17 ம் தேதி வெள்ளி கிழமை மாலை வாண வேடிக்கை யுடன் சுவாமி ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். மறுநாள் சனி கிழமை பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தும் காவடி எடுத்து வந்து பூக்குழி இறங்கும் உற்சவம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஞாயிற்று கிழமை மீனவர்களுக்கிடையே பாய்மர படகு போட்டி நடைபெற்றது.
இந்த போட்டி தொண்டி வங்க கடலில் நடைபெற்றது. இந்த போட்டியில் தொண்டி, நம்புதாளை தேவிப்பட்டிணம் ,மோர்பண்னை, புதுக்குடி ஆகிய ஊர்களில் இருந்து 25 க்கும் மேற்பட்ட பாய்மர படகுகள் கலந்து கொண்டன.. இந்த படகுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு விழா கமிட்டி சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த பாய்மர படகு போட்டியை நூற்றுக்கணக்காண பொதுமக் கள் கண்டு மகிழ்ச்சியடைந்தனர்..
கருத்துகள் இல்லை