Header Ads

  • சற்று முன்

    அரவங்குறிச்சி நெடுஞ்சாலையில் 108 ஆம்புலன்ஸ் எரிந்து விபத்து


    பள்ளப்பட்டியை சேர்ந்த குமரேசன் வயது 50 இவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.   இதைத் தொடர்ந்து அரவக்குறிச்சியில் உள்ள 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் அவரை அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு ஏற்றி அழைத்து வந்தனர் அப்போது குமரன் வலசு மின் நிலையம் அருகில் வந்தபோது வேகத்தடையை தாண்டி செல்லும் பொழுது, நோக்கி இன்ஜினில் திடீரென புகை கிளம்பியது தொடர்ந்து தீப்பிடித்து எரிய தொடங்கியது.


    இதனால் உடனடியாக வண்டியை நிறுத்திய 108 ஆம்புலன்ஸ் டிரைவர் வண்டியில் இருந்த நோயாளி குமரேசன் மற்றும் உறவினர்கள் அவரை அவசர அவசரமாக கீழே இறக்கி அருகில் உள்ள கோவிலில் தங்க வைத்தனர்.  மேலும் வண்டியில் இருந்த நர்ஸ்  இருவர் உடனடியாக கீழே குதித்து உயிர் தப்பினர். இதனால் உயிர் சேதம் ஏதும் இல்லாமல் காப்பாற்றப்பட்டது.

    உடனடியாக அரவக்குறிச்சி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  விரைந்து வந்த தீயணைப்பு படையினர் நிலைய அலுவலர் பச்சமுத்து தலைமையில் உடனடியாக தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.  ஆனால் அதற்குள் 108 ஆம்புலன்ஸ் முழுமையும் எரிந்து சேதமடைந்தது. நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த ஆம்புலன்ஸ் விபத்தால்  அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad