தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து. 16 மாணவ மாணவிகள் காயம் காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதி.
சிவகங்கை மாவட்டம் புதுவயல் நாட்டுசேரி அருகே பெத்தானேந்தலில் இயங்கி வருகிறது தனியார் மெட்ரிக் பள்ளி. இன்று காலையில் அப்பள்ளிக்கு மாணவ, மாணவியரை ஏற்றிக் கொண்டு தனியார் வேன் சென்றது. அப்போது நாட்டுச்சேரி என்ற இடத்தில் வளைவில் திரும்பும் போது, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இதில் வேனில் பயணம் செய்த 16 மாணவ மாணவிகளும் காயம் அடைந்தனர். காயமடைந்த மாணவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு, காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து பற்றி வழக்கு பதிவு செய்த சாக்கோட்டை போலீஸார் விபத்துகான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை