Header Ads

  • சற்று முன்

    தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில இளைஞா அணி செயலாளர் திருவாடானை நீதிமன்றத்தில் ஆஜராகி பிணையில் சென்றார்


    ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா திருவாடான காவல் நிலையத்தில் கடந்த ஏப்ரல் 30ம் தேதி ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்த சிங்காராம் மகன் ஆறுமுகம் என்பவர் திருவாடானை காவல் நிலையத்தில் புகார் மனுவினை கொடுத்தார் அந்த புகார் மனுவில் ஓரிக்கோட்டை பாரதிநகரைச் சேர்ந்த  முருகானந்தம் என்பவர் தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில இளைஞர் அணி செயலாளராக உள்ளார் இவர் தனது முகநூல் பக்கத்தில் கடந்த ஏப்ரல் 11ம் தேதி தமிழக அரசை பற்றி விமர்சனம் செய்தாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் ஏப்ர்ல் 30ம் தேதி திருவாடானை காவல் நிலையத்தில் வழக்கு தொடர்ந்து முருகானந்தத்தை  தேடிவந்தனர். இந்நிலையில் அவர் முன“ஜாமீன் பெற்று அதன் படி திருவாடானை நீதிமன்றத்தில் ஆஜராக உரிய ஜாமீன்தார்கள் உதவியுடன் ஜாமீனல் சென்றார். அப்போது அவர் இந்திய நாட்டில் கருத்து சுதந்திரம் என்பது இல்லாத நிலைதான் உள்ளது. முகநூலில் பொல்லாச்சி பாலியல் வழக்கு அதன் குற்றவாளிகளை பற்றி பதிவு போட்டதற்கு இப்படி என் மீது பொய்யான வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கு ராமநாதபுரம் தகவல் தொழில் நுட்ப அமைச்சர் மணிகண்டன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பொல்லாச்சி ஜெயராமன் குடும்பத்தாரினட தூண்டுதலின் பேரிலேயே வழக்கு பதிவு செய்துள்ளனர். இது பற்றி நான் தனியாக இவர்கள் மீது வழக்கு தாக்கல்  உள்ளேன். என்று தெரிவித்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad