திருவாடானை அருகே வீணாகும் குடி நீர் கண்டுகொள்ளாத தொண்டி பேரூராட்சி நிர்வாகம்
ராமநாதபுரம் மாவட்டம், திருவானை தாலுகா, தொண்டி பேரூராட்சிக்கு கூட்டுக்குடிநீர் திட்டத்தின் படி மாவிடுதிக் கோட்டையில் இருந்து குடி தண்ணீர் குழாய் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. . இந்த குடி தண்ணீர் சின்னகீரமங்கனலத்தில் திருச்சி-இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் குழாய் உடைப்பு ஏற்பட்டு வீணாகிறது. குடிநீர் வீணாக கடந்த ஒரு மாதமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் திருச்சி-இராமேஸ்வரம் சாலை சேதமடைந்து விபத்து அபாயம் உள்ளது. அது பற்றி பல முறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் குடிநீர் குளம் போல் தேங்கி கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமப்பட்டு வருகிறார். துரித நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
கருத்துகள் இல்லை