ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சண்முகையா ஆதரித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டார்
மாப்பிள்ளையூரணி ஊராட்சி சிலுவை பட்டி பகுதியில் அவருக்கு பொதுமக்கள் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர் அதனைத் தொடர்ந்து வேட்பாளரை ஆதரித்து பேசிய அவர் அதிமுக ஆட்சியை மாற்றகூடிய தேர்தல் நடைபெறகூடிய இடை தேர்தல் எனவும் மக்களுக்கு குடிநீர் வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல பிரச்சனைகள் தற்போது நடக்கும் ஆட்சியாளர்களால் தீர்க்க முடியாமல் இருந்து வருகிறது எனவும் தூத்துக்குடியில் சாலை வசதிகள் கிடையாது.இப்பகுதியில் பட்டதாரிகள் வேலை வாய்ப்பு ஏற்படுத்தவேண்டும்.
என பல கோரிக்கைகள் தொடர்ந்து வைக்கப்பட்டு வருவதாகவும்.மக்கள் கேட்டதை விரைவில் வரக்கூடிய ஆட்சி மாற்றத்திற்கு பின் நிறைவேற்றி தருவோம் எனவும் அவர் தெரிவித்தார்.அதிமுக ஆட்சி மத்தியில் இருக்கும்
பாஜகவிற்கு துணையாக இருந்தாலும் தமிழகத்தில் என்ன பிரச்சனை நடந்தாலும் என்னவென்று கேட்க ஆளில்லை எனவும் பிரதமர் மோடி தேர்தலில் வேட்பு மனு செய்ய சென்றால் தமிழகத்தில் இருந்து ஓ.பி.எஸ் சென்று வாழ்த்தி வரக்கூடிய சூழலில் இருக்கிறார்கள்.நீங்கள் என்ன செய்தாலும் நாங்கள் இருக்கிறோம் என சொல்லி வருகிறார்கள்.ஜி.எஸ்.டியால் மக்களை துன்புறுத்தியவர்கள் மக்களின் வியாபாரத்தை அழித்தவர்கள் பாஜகவினர்.அவர்களுக்கு உறுதுணையாக இருப்பவர்கள் அதிமுகவினர்.தமிழகத்தில் ஏரி குளங்களில் தண்ணியில்லாத நிலை இப்போது உள்ளது.குளங்களை தூர்வாராமல் தூர்வாரியதாக கணக்கெழுதிகொள்கிறார்கள்.ஆட்சிமாற்றத்திற்க்கான வாய்ப்பு உங்கள் கையில் உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி மாற்றம் வரும்.திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வாராகி வருவார் எனவும் ஓட்டபிடாரம் தொகுதிக்கு திமுக சார்பில் அறிவித்துள்ள அறிக்கையில் புதியமுத்தூர் ஆயத்த ஆடை பூங்கா,ஓட்டபிடாரம் பகுதியில் நீதிமன்றம் அமைக்கபடும்,காங்கேயன் கால்வாய் அமைக்கபடும் என வாக்குறிதிகள் அளிக்கப்பட்டுள்ளது இந்த திட்டங்கள் வெற்றி பெற்றவுடன் நிறைவேற்றித் தரப்படும் எனவும் மற்றவர்களை மாதிரி அறிக்கைகளை விட்டு விட்டு அதனை காற்றில் பறக்க விட மாட்டோம் எனவும் அவர் பேசினார்
இதனை தொடர்ந்து மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் அமைந்துள்ள பகுதிகளான சிலுவை பட்டி கணபதி நகர் சுனாமி காலனி தாளமுத்து நகர் ஆகிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது திமுக கூட்டணி கட்சியினர் இருசக்கர வாகனத்தில் சென்ற திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர்
கருத்துகள் இல்லை