Header Ads

  • சற்று முன்

    சென்னை பெரம்பூரில் இலவச கால்பந்தட்ட சிறப்பு முகாம்......


    சென்னை பெரம்பூரில் உள்ள தொன்பாஸ்கோ பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சென்னை பெரம்பூர் ஓய்.எம்.எஸ்.சி கால்பந்தட்ட அகடாமி சார்பில் தினந்தோறும் காலை 6மணி முதல் 9மணி வரை சிறுவர்களுக்கு இலவசமாக கால்பந்தாட்ட பயிற்ச்சி முகாம் நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான  சிறுவர்கள் உட்பட இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று கால்பந்து பயிற்ச்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும் இது குறித்து பயிற்ச்சியாளர் திரு. இளங்கோ கூறுகையில்.

    எனக்கு கால்பந்தாட்டத்தின் மீது உள்ள தீராத காதலால் நான் வெறிதனமாக இந்த ஆட்டத்தினை கற்று கொண்டேன். அதன் மூலம் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று விளையாடி பல பரிசுகளை வென்று வந்துள்ளேன். அதன் காரணமாக மத்திய சுங்க துறையில் எனக்கு அரசு பணி வழங்கப்பட்டது. அடிப்படையில் எவ்வித பயிற்ச்சியும் இல்லாமல் நானே எனது சொந்த முயற்ச்சியால் இந்த விளையாட்டியினை கற்று கொண்டேன். என்னை போன்று ஆர்வமுள்ள பல இளைஞர்கள் மற்றும் சிறுவர்ளுக்கும் இந்த விளையாட்டியினை முறையான பயிற்ச்சி மூலம் கற்று தரவேண்டும் என எண்ணி இந்த பயிற்ச்சி முகாமினை இலவசமாக துவக்கி உள்ளேன். இந்த பயிற்ச்சி முகாமில் பங்கேற்ற எந்தவிதமான கட்டணம் கிடையாது. அதேபோல ஜாதி மதம் மொழி இனம் எதுவும் கிடையாது. திறமை மற்றும் ஆர்வத்திற்க்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கபடும். வருங்காலத்தில் அவர்கள் மிகபெரிய கால்பந்தாட்ட வீார்களாக உருவாகி பல்வேறு சாதனைகள் புரிய வேண்டும் என்பதே எங்கள் அகடாமியின் ஆசை என அவர் குறிப்பிட்டார். மேலும் பயிற்ச்சியில் ஈடுபடும் வீரா்கள் தங்களை மெருகேற்றி சிறப்பான திறனை வெளிபடுத்தினால் அவர்களுக்கு  அரசு துறைகளில் வேலை வாய்ப்பு காத்துகொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad