எட்டையபுரம் அருகே 70 ஆண்டுகளுக்கு பின்பு சந்தித்து கொண்ட பூர்வீக கிராம மக்கள்.
எட்டையபுரம் அடுத்துள்ள அயன் வடமலாபுரம் கிராமத்தில் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாமிய மக்கள் வாழ்ந்து வந்தனர். நாளடைவில் பூர்விகமாக குடியிருந்த இஸ்லாமிய பெருமக்கள் தங்கள் பிழைப்புக்காக சிங்கப்பூர் . பர்மா, ரங்கூன், இலங்கை போன்ற நாடுகளுக்கு சென்று வணிகம் செய்து வந்தனர். சிலர் உள்நாட்டில் கோவை, மதுரை, வாணியம்பாடி, சென்னை, ஹைதரபாத் போன்ற பல நகரங்களில் புலம் பெயர்ந்து வசித்து வருகின்றனர். தங்கள் இல்ல நிகழ்ச்சிகளில் ஒரு சில உறவுகளை தவிர அனைத்து சொந்தங்களையும் சந்தித்து உறவுகளை ஏற்படுத்தி கொள்ள முடியவில்லை. இதனை கருதி அனைவரையும் ஒருங்கிணைக்கும் வகையில் பூர்வீக மக்கள் சங்கமம் என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து முகநூல், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வாயிலாக சுமார் 70 ஆண்டு களுக்கு முன் பிரிந்து சென்று இரண்டு தலைமுறையாக பல நகரங்களில் வாழ்ந்து வரும் இஸ்லாமிய குடும்பங்கள் அனைவரையும் ஒன்றிணைத்து அயன் வடமலாபுரத்தில் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இஸ்லாமிய பெருமக்கள் பல்வேறு நகரங்களில் இருந்து வந்து தங்களது குடும்பங்களுடன் கலந்து கொண்டுஇந்நிகழ்ச்சிக்கு இஸ்லாமியர்கள் மட்டுமின்றி இந்துக்களையும் விழாவிற்கு அழைத்து சிறப்பு செய்தனர். இஸ்லாமிய குடும்ப சங்கமம் நிகழ்ச்சிக்கு அரவிந்த் கண் மருத்துவமனை குழுமம் செயலர் சீனிவாசன் தலைமை வகித்தார். அரவிந்த் கண் மருத்துவமனை துணைத் தலைவர் நாச்சியார்,
முகமது கபீப், ஜெயினாலப்தீன், ராஜாகனி,ஹக்கீம் முன்னிலை வகித்தனர். ஹஸ்ரத் அப்துல் ரகுமான் சிறப்புரை ஆற்றினார். அரவிந்த் கண் மருத்துவ மனை துணைத் தலைவர் மருத்துவர் நாச்சியார் கலந்து கொண்டு பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார். இதனை தொடர்ந்து 70 ஆண்டுகளுக்கு பின்பு சந்தித்து கொண்ட இஸ்லாமிய பெருமக்கள் ஒருவருக்கொருவர் கட்டி அணைத்து தங்களது பழைய நினைவுகள், உறவுகள் குறித்து அன்புடன் பகிர்ந்து கொண்டனர்.கூட்டத்தில் பெற்றோர்களை வீடுகளில் அவமரியாதை செய்யக்கூடாது, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும், சாதிசமய சச்சரவுகளுக்கு அப்பாற்பட்டு சகோதரர்களாய் வாழ வேண்டும் என பலர் பேசினர். சிறப்பு தொழுகையும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து அக்கிராம மக்கள் சார்பில் இஸ்லாமிய பெரு மக்களுக்கு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நிகழ்ச்சியில் கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் வரதராஜன், கிராம கமிட்டி தலைவர் கிருஷ்ணசாமி, செயலர் ராஜேஸ், பொருளாளர் சீனிவாசன், முகமது சேட், சிக்கந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்,
கருத்துகள் இல்லை