Header Ads

 • சற்று முன்

  பிஜேபி மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டால் இதுதான் இந்தியா சந்திக்ககூடிய கடைசி தேர்தலாக இருக்கும் என்ற அச்சம் இருக்கிறது - கனிமொழி


  கூட்டத்தில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி பேசுகையில் ஜிஎஸ்டியில் இருக்க கூடிய குழப்பம், பணமதிப்பிழப்பு அறிவிப்பு என இந்த இரண்டும் சேர்ந்து இந்த பகுதியில் இருக்க கூடிய எல்லா தொழில்களையும் முக்கியமாக கடலைமிட்டாய் தொழிலை கூட மூடக்கூடிய நிலைக்கு கொண்டு வந்து விட்டுள்ளது. தீப்பெட்டி தொழிற்சாலையே இல்லை என்கிற நிலைக்கும் பட்டாசு தொழிலை நாசாமாக்கி 8 லட்சம் பேர் வேலை இழக்க கூடிய ஒரு நிலை என இப்படி பொருளாதார ரீதியாக இந்த நாட்டையே சீரழித்துவிட்ட ஒரு ஆட்சி பிஜேபி ஆட்சி.  இளைஞர்களின் வேலை இல்லாத திண்டாட்டம் நாட்டில் தற்போது ஒரு மோசமான நிலையை அடைந்திருக்கிறது. கிராமம் முதல் நகரம் வரை ஒவ்வொரு குடும்பத்திலும் படித்த இளைஞர்களும் பெண்களும் வேலை இல்லாமல் தவித்து கொண்டிருக்ககூடிய சூழலை நாம் அறிவோம். தமிழ்நாடு அரசாங்கத்தின் பாலிசி நோட்டில் 2 ஆயிரம் சிறு குறு தொழிற்சாலைகள் நசிந்து போய் மூடப்பட்டுள்ள சூழல் உருவாகியிருக்கிறது எனவும் பணியில் இருந்த 5 லட்சம் பேருக்கு வேலை பறிபோக கூடிய சூழல் உருவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  பொருளாதாரத்தை நாசப்படுத்திய ஆட்சி பிஜேபி ஆட்சி. அதை தாண்டி மக்களுடைய மனதில் ஒரு பயத்தை அச்சத்தை தயக்கத்தை உருவாக்கி ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்து கொள்ள வேண்டும் என நினைக்க கூடியவர்கள் பிஜேபி கட்சியினர். யார் போராடினாலும் எதிர்த்து பேசினாலும் எழுதினாலும் பிஜேபி ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் எந்த மாநிலமாக இருந்தாலும் குழப்பங்களை உருவாக்குகிறார்கள். அதை தாண்டி அங்கு இருக்க கூடிய அரசியல்வாதிகள், முதலமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருமான வரித்துறை ரெய்டு நடத்தப்படுகிறது. தொடர்ந்து இவர்கள் ஆட்சியில் இல்லாத இவர்கள் கூட்டணியில் இல்லாத எல்லா கட்சிகள் மீதும் இருக்க கூடிய அரசாங்க நிறுவனங்களை எல்லாம் அவர்களுக்கு எதிராக பயன்படுத்தி அடக்கி ஆளக்கூடிய ஆட்சிதான் பிஜேபி ஆட்சி. அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள். பத்திரிக்கையாளர்கள், சிந்தனையாளர்கள் எதிர்த்து எழுதக்கூடிய பலரும் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். போலீஸ் வழக்கு போடப்படுகிறது. எங்களை எதிர்த்து யாரும் அரசியல் ரீதியாக சமூக ரீதியாகவோ செயல்படகூடாது என்று தொடர்ந்து மக்கள் மீது அச்சுறுத்தலை ஏற்படுத்தி கொண்டிருப்பவர்கள் பிஜேபி கட்சியினர் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இங்கே தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் சோபியா எனும் மாணவி பாஜக வேட்பாளராக நிற்ககூடிய தமிழிசை சவுந்தரராஜனை பார்த்து கேள்வி எழுப்புகிறார். எதிர் குரல் எழுப்புகிறார். அந்த பெண் மீது வழக்கு போட்டு சிறையில் அடைக்க கூடிய நிலையில் உள்ளவர் தான் பிஜேபியை சேர்ந்த இங்குள்ள வேட்பாளர் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஸ்டெர்லைட் வேண்டாம் என மக்கள் போராடுகிறார்கள். முதலமைச்சர் அல்லது அமைச்சர்கள் போய் போராட்டம் நடத்துகிற மக்களிடம்  பேசவில்லை. 100வது நாள் கலெக்டர் அலுவலகம் நோக்கி வந்தவர்கள் சுட்டு கொள்ளப்படுகிறார்கள். நான் இப்பிரச்சனையை மாநிலங்களவையில் பேசினேன். அதிமுகவை சேர்ந்த பல எம்பிக்கள் அந்த அவையில் இருந்தும் எந்த எம்பியும் இப்பிரச்சனையை பற்றி பேச தயாராக இல்லை. நான் அந்த பிரச்சனையை பற்றி பேசியபோது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க கூடியவர்கள் தான் இங்குள்ள ஆளுங்கட்சியினர். என்னை பேச விடாமல் தடுத்து ஒரு போராட்டத்துக்கு பின்னர் தான் இப்பிரச்சனையை பற்றி கூட  மாநிலங்களவையில் பேசக்கூடிய ஒரு சூழல் இருக்கிறதென்றால் இவர்கள் மனநிலை எப்படிப்பட்டதாக இருக்கிறது என்று சிந்தித்து பாருங்கள். அந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது கூட பிஜேபிக்காக அதிமுக எடுத்த நிலைப்பாடு. எங்களை எதிர்த்து யாராவது குரல் எழுப்பினால் போராடினால் இது தான் உங்களுடைய நிலைமை என்று அவர்களை எச்சரிக்க கூடிய ஒன்றறாக தான் அதை நாம் பார்க்க முடிகிறது. அதன்பிறகு அந்த கலவரத்துக்கு உண்மையில் பின்னணியாக இருந்த சூழல் என்ன என்பதை தோழர் முகிலன் பத்திரிக்கையாளர்களை சந்தித்து வெளியிடுகிறார். அதில் இந்த கலவரத்தை நடத்தியதே அரசாங்கம் தான் என்று அவர் அதற்கான ஆதாரங்களை எடுத்து வைத்து விட்டு சென்னையிலிருந்து தனது சொந்த ஊருக்கு திரும்பி செல்கிறார். இன்றுவரை அவர் எங்கு இருக்கிறார் அவர் நிலைமை என்னவென்று தெரியவில்லை. இப்படி எந்தவித பொதுப்பிரச்சனையாக மக்கள் பிரச்சனையாக இருக்கட்டும் இந்த அரசாங்கத்தை பற்றி எந்த கருத்தும் சொல்லக்கூடாது என்ற பயத்தை மக்களிடம் ஏற்படுத்தி தன் சர்வதிகாரத்தை நிலைநாட்டி கொள்ள கூடிய ஒரு ஆட்சிதான் பிஜேபி. அவர்களுக்கு துணையாக நின்று கொண்டிருக்க கூடிய பினாமிகளாக செயல்பட்டு கொண்டிருக்க கூடிய அதிமுக என்பதை நாம் புரிந்து கொண்டு இந்த தேர்தலை எதிர் கொள்ள வேண்டும். பலருக்கும் ஒரு அச்சம் சந் இருக்கிறது. மறுபடியும் பிஜேபி ஒருவேளை ஆட்சிக்கு வந்துவிட்டால் இதுதான் இந்தியா சந்திக்ககூடிய கடைசி தேர்தலாக இருக்கும் என்ற அச்சம் இருக்கிறது. நிஜமாக சொல்கிறேன் அது வெறும் அடிப்படை ஆதாரமற்ற அச்சமில்லை. அவர்கள் இதை செய்ய கூடியவர்கள் தான். இனிமேல் தேர்தலே நடத்தகூடாது என்று நினைக்க கூடியவர்கள் தான். நாம் எப்போதும் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்று நினைக்க கூடியவர்கள். மத கலவரங்களை, சாதி கலவரங்களை உருவாக்கி பாஜக போட்டியிடக்கூடிய அத்துணை தொகுதிகளிலும் எப்படியாவது சாதியின் பெயரால் மதத்தின் பெயரால் வெளிப்படையாக வாக்கு சேகரித்து கொண்டிருக்கிற ஒரு கட்சி உண்டு என்றால் பாஜக கட்சி தான். இந்து முஸ்லிம் கிறிஸ்தவர்கள் எந்த மதத்தை சாதியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அனைவருக்குமே இந்த நாடு எல்லோருக்கும் சொந்தமான இந்தியா என்ற உணர்வு தொடர வேண்டும் என்றால் அந்த நம்பிக்கை தொடர வேண்டும் என்றால் எந்த சூழலிலும் இந்த நாட்டில் மறுபடியும் பிஜேபி ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்ற நிலையை புரிந்து கொண்டு இந்த தேர்தலில் நாம் வாக்களிக்க வேண்டும். நம் நாட்டை காப்பாற்ற  வேண்டிய, நம் பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டிய ஒரு நிலையிலே நின்று கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து கொண்டு மக்கள் தேர்தலை சந்திக்க வேண்டும். ஆகவே அனைவரும் மதசார்ப்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளரான எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்

  கருத்துகள் இல்லை

  Post Top Ad

  Post Bottom Ad