Header Ads

  • சற்று முன்

    திருவண்ணாமலையில் தேர்தல் பாதுகாப்பு பணியின் ஒரு கட்டமாக போலீசாருடன் துணை ராணுவத்தினர் ணகொடி அணிவகுப்பு நடத்தினர


    தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடக்கிறது. அதே நாளில் சித்ரா பவுர்ணமியும் நடக்கிறது. இந்த நிலையில் தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது

    வாக்குப்பதிவுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது. பாதுகாப்பு பணிக்காக ஆந்திராவில் இருந்து திருவண்ணாமலைக்கு துணை ராணுவப்படையினர் வந்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் தங்கள் வாக்குகளை பதிவு செய்யவும், 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தியும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. மேலும் சித்ரா பவுர்ணமியன்று திருவண்ணாமலையில் கிரிவலத்திற்கு வரும் பக்தர்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு குறித்தும், தேர்தலின்போது பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையிலும் நேற்று காலை திருவண்ணாமலையில் துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் துப்பாக்கி ஏந்தியவாறு பங்கேற்ற கொடி அணிவகுப்பு நடைபெற்றது. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா, கொடி அணிவகுப்பை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    திருவண்ணாமலை துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை முன்னிலை வகித்தார். இந்த கொடி அணிவகுப்பு திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகில் உள்ள அறிவொளி பூங்கா அருகில் தொடங்கி சின்னக்கடை வீதி, மாட வீதி, கடலைகடை மூலை, திருவூடல் தெரு, திருமஞ்சன கோபுர தெரு வழியாக தண்டராம்பட்டு சாலையில் உள்ள காமராஜன் சிலை அருகில் நிறைவடைந்தது.
    கடைசியாக வஜ்ரா வாகனம் சென்றது. இதில் துணை ராணுவத்தினர் 70 பேர் உள்பட ஆயுதப்படை போலீசார், சிறப்பு காவல் படை போலீசார், சட்டம் ஒழுங்கு போலீசார் என சுமார் 200–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad