Header Ads

  • சற்று முன்

    ஊதிய உயர்வு கோரி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


    திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊதிய உயர்வு கோரி, மேல்நீர் தேக்க தொட்டி இயக்குபர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களுக்கு, ஏழாவது ஊதியக்குழு அறிவித்த 30 சதவீத ஊதிய உயர்வு வழங்க கோரியும், ரூ.4740 லிருந்து, ரூ. 2320 ஊதியம் குறைத்து வழங்குவதை கைவிட வலியுறுத்தியும், ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தமிழக அரசு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம், சிஐடியு சார்பில், நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் து.வேலு தலைமை தாங்கினார். சிஐடியு நிர்வாகிகள்,  இரா.பாரி, எஸ்.ஆனந்தன், மாநில தலைவர் பாலசுப்பிரமணியன், மாநிலத் துணைத் தலைவர், வீராசாமி, பொதுக்குழு உறுப்பினர் கோவிந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தமிழக அரசு அறிவித்த ஊதிய உயர்வு வாங்காத பட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் வேலைநிறுத்தம் செய்யவும் முடிவு செய்துள்ளதாக  சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர் 

    செய்தியாளர் :  திருவண்ணாமலை மூர்த்தி

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad