Header Ads

  • சற்று முன்

    பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து மதுரை திருமங்களத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்


    பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்தும் அதில் தொடர்புடைய நபர்களை அனைவரையும் கைது செய்யக் கோரி திருமங்கலம் வழக்கறிஞர் சங்கம் சார்பில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

    ( யாருடைய மகனாக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ராமசாமி பேட்டி)

    மதுரை மாவட்டம் திருமங்கலம் நீதிமன்ற வளாகத்தில் பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து நபர்களை கைது செய்ய வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் பலாத்கார விவகாரத்தில் இச்சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து நபர்களையும் உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை விரைவில் தூக்கிலிட வேண்டும் என வலியுறுத்தி திருமங்கலம் வழக்கறிஞர் சங்க தலைவர் ராமசாமி தலைமையில் பெண் வழக்கறிஞர்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ஆர்ப்பாட்டத்தின்போது எம்எல்ஏ எம்பி யாருடைய மகனாக இருந்தாலும் சரி உடனடியாக கைது செய்ய வேண்டும் என கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன இதனைத் தொடர்ந்து வழக்கறிஞர் சங்கத் தலைவர் ராமசாமி செய்தியாளரிடம் கூறியதாவது பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது காவல்துறை உயரதிகாரிகளின் மகனாக இருந்தாலும் சரி அமைச்சர் மகான்களாக இருந்தாலும் சரி அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் காஷ்மீர் சம்பவம் மற்றும் பாகிஸ்தான் சம்பவத்தை காட்டிலும் மிகவும் கொடுமையாக உள்ளது காவல்துறை அவர்களை கைது செய்து நீதிமன்றம் அவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என பேட்டியளித்தார் இதனை தொடர்ந்து பெண் வழக்கறிஞர் சங்கரலட்சுமி பேட்டியளித்ததாவது குற்றவாளிகளை வேண்டுமென்றே மறைத்து வைத்துள்ளீர்கள் எந்த பதவியில் இருந்தாலும் யாருடைய மகனாக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் பெண்களுக்கு எதிராக நிறைய சட்டங்கள் இருந்தாலும் இன்று வரை அமுலுக்கு வரவில்லை பாதிக்கப்பட்ட பெண்ணை ஊடகங்கள்தான் வெளியிட்டுள்ளார்கள் இச்சம்பவம் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது காவல் துறையும் இதற்கு உறுதுணையாக உள்ளது இச்சம்பவங்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தொடர்ந்து சம்பவங்கள் அதிகரிக்கும் ஆகையால் அவர்களை நடவடிக்கை எடுத்தது மட்டுமல்லாமல் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

    பேட்டி ராமசாமி வழக்கறிஞர் சங்க தலைவர் சங்கரலட்சுமி பெண் வழக்கறிஞர்


    செய்தியாளர் : மதுரை திருமங்கலம் - நீதிராஜன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad