Header Ads

  • சற்று முன்

    தேர்தலில் நிர்வாகிகள் ஒற்றுமையுடன் செயல்பட்டு வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் டி.டி.வி. தினகரன் கூறினார்.


    அ.ம.மு.க. துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. நேற்று முன்தினம் இரவு திருவண்ணமலைக்கு வந்தார். பின்னர் அவர், திருவண்ணாமலையில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கினார். நேற்று காலை ஓட்டலில் உள்ள கூட்டரங்கில் துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் ஆரணி மற்றும் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் டி.டி.வி. தினகரன் பேசியதாவது:-
    நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட உள்ளோம். திருவண்ணாமலை, ஆரணி ஆகிய 2 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதனை கட்சி நிர்வாகிகள் தான் உறுதுணையாக இருந்து வெற்றி பெற செய்ய வேண்டும். அ.தி.மு.க.வினரிடம் ஆட்சி அதிகாரமும் கூட்டணியும் தான் இருக்கிறதே தவிர வேறு ஒன்றுமே இல்லை. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது தி.மு.க. டெபாசிட் இழந்தது. அ.தி.மு.க.வினர் ஓட்டுக்கு ரூ.6 ஆயிரம் கொடுத்தார்கள். ஆனாலும் வெற்றி பெற முடியவில்லை.

    ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்த பா.ம.க. மற்றும் தே.மு.தி.க.வினரோடு இன்றைக்கு அ.தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் போட்டியிட வேட்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள். அதேபோல 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் போட்டியிடுவதற்கு வேட்பாளர்கள் தயாராக உள்ளனர். எனவே, இந்த தேர்தலில் நிர்வாகிகள் சிறப்பாக ஒற்றுமையுடன் செயல்பட்டு நமது வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் கட்சி அமைப்பு செயலாளர் சி.ஏழுமலை, மாநில அமைப்பு சாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் ஏ.கே.ஆர்.கதிரவன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் பையூர் ஏ.சந்தானம், மண்டல பொறுப்பாளர் என்.ஜி.பார்த்திபன், திருவண்ணாமலை மாவட்ட செயலாளர்கள் பஞ்சாட்சரம், வரதராஜன், எஸ்.ஆர்.தருமலிங்கம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்

     செய்தியாளர் :  திருவண்ணாமலை -  மூர்த்தி

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad