ஓசூர் அருகே 17 வயது சிறுமி பாலியல் தொந்தரவு : அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி, போலீஸார் விசாரணை
ஓசூர் அருகே கொர்னூர் கிராமத்தில் 17 வயது சிறுமியை அதேபகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் தைல மரத்தோட்டத்திற்குள் தூக்கி சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதில் பாதிக்கப்பட்ட சிறுமி ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து ஓசூர் அனைத்து மகளீர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஓசூர் அடுத்த கும்ளாபுரம் அருகேயுள்ள கொர்னூர் கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சீவப்பா இவரது மகள் சஞ்சீவம்மாள் (17) பெயர் மாற்றி கொள்ளவும், இவர் 9ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். தற்போது சிறுமி சஞ்சீவம்மாள் கொர்னூர் அருகேயுள்ள பேளகொண்டப்பள்ளி கிராமத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். வேலை முடிந்த பின்னர் சஞ்சீவம்மாள் தினந்தோறும் தொழிற்சாலையிலிருந்து கொர்னூர் கிராமத்திற்கு ஒத்தையடி பாதையில் நடந்து செல்வார். இந்த நிலையில் சஞ்சீவம்மாள் தொழிற்சாலையில் வேலை முடிந்து தனது கிராமத்திற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது கொர்னூர் கிராமத்தை சேர்ந்த ராஜப்பா என்பவரின் மகன் சந்து என்பவர் சஞ்சீவம்மாளை இருசக்கரவாகனத்தில் ஏற்றி செல்வதாக கூறி அழைத்து சென்றுள்ளார். அப்போது செல்லும் வழியில் கலுகொண்டப்பள்ளி கிராமத்தில் உள்ள தைல மரத்தோட்டத்திற்குள் சிறுமி சஞ்சீவம்மாளை தூக்கி சென்ற சந்து அவரை பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி இதுகுறித்து தனது பெற்றோர்களிடம் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் இந்த பாலியல் தொந்தரவு குறித்து ஓசூர் அனைத்து மகளீர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி ஒசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து சிறுமியத்தை அடுத்து, ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கை பதிவு செய்து, சந்துவை தேடி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை