Header Ads

  • சற்று முன்

    அடிப்படை தேவைகளை நிறைவேற்ற கோரி கோவில்பட்டி அருகே கருப்பு கொடியேந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்


    கோவில்பட்டி அருகே வில்லிசேரி கீழக் காலனியில் குடிநீர், சாலை, வாறுகால் வசதிகள், கட்டப்பட்டதில் இருந்து காட்சிப்பொருளாக உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சரி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அப்பகுதி மக்கள் இன்று திடிரென கருப்பு கொடிகளை கைகளில் ஏந்தி திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 


    தகவல் அறிந்து கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் ஆவுடையப்பன் தலைமையிலான போலீஸார் அங்கு வந்தனர். தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருப்பதால், அனுமதியின்றி போராட்டங்கள் நடத்தக்கூடாது என போலீஸார் தெரிவித்தனர். அப்போது, சாலை, குடிநீர், வாறுகால் போன்றவை இல்லாதது குறித்து தெரிவித்த கிராம மக்கள், இதுதொடர்பாக பலமுறை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு வழங்கினோம் என்றனர். இதுதொடர்பாக கயத்தாறு யூனியன் அலுவலகத்தில் புகார் அளிக்க வேண்டும். அனுமதியின்றி போராட்டங்களில் ஈடுபட கூடாது என போலீஸார் அறிவுறுத்தியதை தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். தங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறவில்லை என்றால் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக தெரிவித்தனர்.

    செய்தியாளர் செய்தியாளர் : கோவில்பட்டி - ராமலிங்கம் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad