குற்றங்களும் தண்டனைகளும்

குற்றங்களும் தண்டனைகளும்

உலக குற்றவியல் வரலாற்றை மாற்றி எழுதிய மாபெரும் மானுட சாசனம்! தமிழாக்கம்: ஏகாந்தன்

கோவில்பட்டியில் வாக்காளர் விழிப்புணர்வு வாகன பேரணி


அனைவரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்பதனை பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும்,  நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தியும் வாக்காளர் விழிப்புணர்வு கோவில்பட்டியில் வாகன பிரச்சார பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 


தாசில்தார்  அலுவலகம் முன்பு தொடங்கிய பேரணியை தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் வி.பி.ஜெயசீலன் தொடங்கி வைத்தார். கோட்டாட்சியர் எஸ்.அமுதா, வட்டாட்சியர்கள் எல்.பரமசிவன், லிங்கராஜ், துணை வட்டாட்சியர்கள் சரவணபெருமாள், ராமகிருஷ்ணன், சுரேஷ், வருவாய் ஆய்வாளர் மோகன், தினகர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பேரணி எட்டயபுரம் சாலை, கதிரேசன் கோவில் சாலை, பூங்கா சாலை, மெயின் சாலை, புது சாலை வழியாக மீண்டும் தாசில்தார் அலுவலகத்தில் நிறைவடைந்தது. 

செய்தியாளர் செய்தியாளர் : கோவில்பட்டி - ராமலிங்கம் 

கருத்துரையிடுக

புதியது பழையவை