Header Ads

  • சற்று முன்

    நாட்டுப்புற கலைஞர்கள் நல சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


    திருவண்ணாமலை, நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம், விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் போன்ற பல்வேறு கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் மக்கள் தங்கள் மனுக்களை அளிக்க கலெக்டர் அலுவலக வளாகத்தில் மனுக்கள் பெற புகார் பெட்டி வைக்கப்பட்டு உள்ளது.
    இந்த நிலையில் நேற்று தமிழ்நாடு நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் நல சங்கம் திருவண்ணாமலை மாவட்டம் சார்பில் நேற்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டு உள்ள புகார் பெட்டியில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
    சமீபத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள கலைமாமணி விருதுகளில் நாடக மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் பலர் புறக்கணிக்கப்பட்டு இருப்பது கலைஞர்களிடையே மிகுந்த வருத்தத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தி உள்ளது. தற்போது தேர்தல் நேரம் என்பதால் திருவிழாக்களில் நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்த இரவு 10 மணி வரை தான் அனுமதிக்கப்படுகிறார்கள். இதனால் எங்களுடைய தொழில் பாதிக்கப்படுகிறது.

    திருவிழா காலங்களில் அனுமதி வழங்கவும், நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையிலும், நேரத்தை அதிகரித்து நிகழ்ச்சி நடத்திக்கொள்ள அனுமதி வழங்கும் படியும், தமிழக அரசு வழங்கும் அனைத்து நல திட்டங்களும் கிடைக்கும் வகையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

     செய்தியாளர் : திருவண்ணாமலை மூர்த்தி

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad