*ஓசூர் அடுத்த தேன்கனிகோட்டை நீதிமன்ற வளாகத்தில் மயங்கி விழுந்த திமுகவின் முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன்*
தமிழகத்தில் கடந்த 2001 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த முல்லை வேந்தன் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தேன்கனிகோட்டை சார்பு நீதிமன்றத்தில் மயங்கி கீழே விழுந்தார்
முல்லைவேந்தன் கடந்த திமுக ஆட்சியில் இந்து அறநிலை துறை மற்றும் செய்தி தொடர்பு அமைச்சராக இருந்தபோது 2003 ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த ராயக்கோட்டையில் நடந்த திமுகவின் பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் தலைவர்களின் வரவேற்புக்காக பட்டாசுகள் வெடிக்கப்பட்டது இதில் தேங்காய் வெடி வெடித்து அந்த கூட்டத்தில் இருந்த 12 வயது சிறுவன் மீது பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் இதையடுத்து அந்த இடமே போர்க்களமாக காட்சியளித்தது அந்த சம்பவம் குறித்து ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர், இந்த வழக்கு விசாரணை ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை சார்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது இந்த விசாரணை தொடர்பாக சம்பந்தப்பட்ட அப்போதைய திமுக வை சேர்ந்த அப்போதைய அமைச்சர் முல்லைவேந்தன்ன ஆஜராக பலமுறை சம்மன் அனுப்பியும் நீதிமன்றத்தில் ஆஜராகாத திமுகவின் முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் தேன்கனிக்கோட்டை சார்பு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது
இதைத் தொடர்ந்து இன்று தேன்கனிக்கோட்டை சார்பு நீதிமன்றத்தில் முன்னாள் திமுக அமைச்சர் முல்லைவேந்தன் நீதிபதி முன்பு ஆஜரானார் விசாரணை நடந்து கொண்டிருந்தபோது நீதிபதி முன்பு நின்று கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் மயங்கிக் கீழே விழுந்தார் அவர் கேட்ட போது உடல் நலம் சரியில்லை என கூறியதை அடுத்து அவரை பரிசோதிக்க தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு உடனடியாக சேர்க்கப்பட்டு அங்கு பரிசோதனை நடைபெற்று வறுகிறது.
இதன் வீடியோ பதிவை www.nms today.com பார்க்கவும் subscribe செய்யவும்
கருத்துகள் இல்லை