Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி அருகே தனியார் பள்ளி பஸ் சுடுகாட்டு சுவற்றில் மோதி விபத்து - 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம்


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அடுத்துள்ள வானமுரட்டியில் இயங்கி வரும் தனியார் பள்ளி பஸ் ஒன்று குமரெட்டியபுரம் அருகேயுள்ள சுடுகாட்டு சுவற்றி மோதி விபத்துக்குள்ளனாதில் ஒரு ஆசிரியை உள்ள 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அடுத்துள்ள வானமுரட்டியில் ஆச்சார்யா என்ற ஆங்கில தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று மாலையில் பள்ளி முடிந்ததும் இப்பள்ளி பஸ் ஒன்று பள்ளி மாணவர்களை ஏற்றிக் கொண்டு சென்றது. பஸ்சினை திருமலங்குறிச்சியை சேர்ந்த டிரைவர் மாரியப்பன் என்பவர் ஓட்டியுள்ளார். பஸ் குமரெட்டியபுரம் அருகேயுள்ள சுடுகாட்டு பகுதியில் உள்ள சுவற்றி எதிர்பாரத விதமாக பஸ் தீடீரென நிலைதடுமாறி மோதி கவிழ்ந்தது. 

    இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் அலறி காத்த ஆரம்பித்துள்ளனர். மாணவர்கள் அலறல் சத்ததினை கேட்ட அருகில் இருந்தவர்கள் விரைந்து பஸ் கண்ணாடியை உடைத்து, மாணவர்களை காப்பாற்றினர். மேலும் நாலாட்டின்புதூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து காயமடைந்த மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் பள்ளி ஆசிரியை மகேஸ்வரி உள்பட 15 மாணவர்கள் பலத்த காயமடைந்தனர். மேலும் 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் லேசானா காயமடைந்தனர். அனைவருக்கும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பள்ளி ஆசிரியை மகேஸ்வரி மட்டும் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

    சம்பவ இடத்தினை கோவில்பட்டி டி.எஸ்.பி.ஜெபராஜ் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். நாலாட்டின்புதூர் போலீசார் பஸ் டிரைவர் மாரியப்பனை கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.


    செய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad