Header Ads

  • சற்று முன்

    திருவண்ணாமலையில் சிவராத்திரியை முன்னிட்டு மயான கொள்ளை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது


    திருவண்ணாமலை நகர பகுதியில் உள்ள மூன்று அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயங்களின் மயானக் கொள்ளை திருவிழா சிறப்பாக நடைபெற்றது.


    திருவண்ணாமலை நகர பகுதியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயங்களின் மகா சிவராத்திரி ரணகளிப்பு உற்சவ திருவிழா மற்றும் மயான கொள்ளை திருவிழா இன்று நடைபெற்றது  முன்னதாக, மூன்று ஆலயஅங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று... பின்பு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் காட்சியளித்து நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தது.
    உடன் பக்தர்கள் தங்கள் நேர்த்திகடனை செலுத்தும் வகையில் தாங்கள் உடம்பில் எலுமிச்சை பழங்களை செடல் அணிந்தும் பல பக்தர்கள் காளியின் பல்வேறு வேடங்களை அணிந்தும் , மேளதாளங்கள் முழங்க நடனமாடியபடி ஊர்வலத்தில் வந்தனர் முக்கிய வீதிகள் வழியாக வந்த ஊர்வலம் ஈசான லிங்கம் உள்ள மயானத்தில் வந்தடைந்தது 

    அங்கு மயானக் கொள்ளை விழா நடைபெற்றது.மேள தாளங்கள் முழங்க பக்தர்கள் சாமியாடினர் மேலும் பேய் பிடித்தவர்களுக்கு பேய்களை விரட்டினர். அதன் பிறகு, அம்மன் காளி அவதாரம் எடுத்து அசூரர்களான அரக்கர்களை கொன்று எலும்பை கடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இம் மயாணக் கொள்ளையை 1000க்கும் மேற்பட்டோர் கண்டு களித்து அம்மனை வழிபட்டனர்.


    இதன் வீடியோ பதிவை கண்டுகளிக்க  www.nms.today.com பார்க்கவும் subscribe செய்யவும்



    திருவண்ணாமலை செய்தியாளர் - மூர்த்தி

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad