• சற்று முன்

    கோவில்பட்டி அருகே கோவில் திருவிழாவினை முன்னிட்டு பால் குட ஊர்வலம்



    கோவில்பட்டி அருகேயுள்ள கொப்பம்பட்டி - தீத்தாம்பட்டி ஸ்ரீகாமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர் மற்றும் பத்திரகாளியம்மன் திருக்கோவில் மகாசிவராத்திரி மற்றும் பாரிவேட்டை விழா கடந்த 4ந்தேதி தொடங்கியது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பாரிவேட்டை மற்றும் பால்குட ஊர்வலம் இன்று நடைபெற்றது.; இதனை முன்னிட்டு சிறப்பு கணபதி ஹோமம், நவக்கிரக பூஜை நடைபெற்றது. இதையெடுத்து சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது இதன் பின்பு கோவில் வளாகத்தில் இருந்து தொடங்கிய பால் குட ஊர்வலம் ஊரின் முக்கிய பகுதிகளின் வழியாக மேள தளம் மற்றும் வாணவேடிக்கையுடன் நடைபெற்றது. பின்பு பக்தர்கள் கொண்டு வந்த பாலை கொண்டு சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்கார தீபாரதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    செய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad