Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டியில் இரவலர் கணக்கெடுப்பு – கோட்டாட்சியர் தொடங்கி வைத்தார்.


    கோவில்பட்டி பகுதியில் சாலைகளில் சுற்றி தெரியும் ஆதரவற்றோர்கள், உறவினர்களால் கைவிடப்பட்டவர்கள் குறித்து கோவில்பட்டி ஆக்டிவ் மைன்ட்ஸ் சார்பில் கணக்கு எடுக்கும் பணியை கோட்டாட்சியர் அமுதா தொடங்கி வைத்தார். 


    மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர் ஜெயசிலி உத்தரவின் பேரில் ஆதரவற்று கோவில்கள், தெரு ஓரங்கள், சிக்னலில் உள்ள இரவலர்கள் குறித்த , சமூக பொருளாதார ஆய்வுகணக்கெடுப்பை ஆக்டிவ்மைன்ட்ஸ் தொண்டு நிறுவனம் மேற்கொண்டுள்ளது. கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோவில் முன்ப நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவில்பட்டிகோட்டாட்சியர் அமுதா கலந்து கொண்டு இப்பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவன தலைவர் தேன்ராஜா, பொறுப்பாளர் சேர்மராஜன், காவல் உதவிஆய்வாளர் குருசாமி, வித்தியபிரகாசம், சிறப்புப் பள்ளிதலைமையாசிரியை ஐடா, உதவியாளர் ராஜலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் அபிராமிசுந்தரி ஆகியோர் கலந்து கொண்டு இப்பணியை மேற்கொண்டனர்.

    செய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad