• சற்று முன்

    பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து ஓசூரில் கல்லூரி மாணவ மாணவிகள் போரட்டம்


    பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்தும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் ஓசூரில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் போராட்டம்

    ஓசூர் அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் மாணவர் அமைப்பு சார்பில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்தும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க கோரியும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. பொள்ளாச்சியில் நடந்த பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது-. இந்த சம்பவத்திற்கு எதிராகவும் குற்றவாளிகளை கண்டித்தும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் கண்டன ஆர்பாட்டங்கள் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

    அதேபோல ஓசூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் தமிழக மாணவர்கள் இயக்கம் ஆகியோர் பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்தும் குற்றவாளிகக்கு கடுமையான தண்டனை வழங்க கோரியும் கண்டன ஆர்பாட்டம் நடத்தினர். இதில் பெண்கள், மாணவிகள் சமூக வலைத்தளங்களை பாதுகாப்போடு கையாள வேண்டும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நாங்கள் துணையாக உள்ளோம், குற்றவாளிகள் தப்பிவிடக்கூடாது எனவும் எனவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.இதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad