Header Ads

  • சற்று முன்

    செங்கம் அருகே இருபிரிவினருகளுக்கு இடையே ஏற்ப்பட்ட மேதலால் பரபரப்பு


    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தீத்தாண்டப்பட்டு அண்ணாநகர் பகுதியில் வசித்து வரும் அருந்ததியின மக்களுக்கும் மாற்று சமூகத்தினருக்கும் ஏற்ப்பட்ட மோததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. 
    செங்கம் அடுத்த தீத்தாண்டப்பட்டு அண்ணாநகர் பகுதியில் வசித்து வரும் அருந்ததியினர் மக்கள் சுமார் ஐம்பது ஆண்டுகாலமாக வழிபட்டு வந்த கோவில் மற்றும் பொது அரசு தொலைகாட்சி அறையினை அதேபகுதியை சேர்ந்த மாற்று சமூகத்தினர் அவர்களது சுயநலத்திற்க்காக அப்பகுதியில் வசித்து வரும் அருந்தியின மக்களை விரட்டும் நோக்கோடு கோவில் மற்றும் தொலைகாட்சி அறையினை பயங்கர ஆயுதங்கள் கொண்டு இடிக்க முற்ப்பட்டுள்ளனர் இதனை கண்ட அருந்ததியின மக்கள் உயர் சமூகத்தை சேர்ந்தவர்களிடம் எங்கள் கோவிலை இடிக்க வேண்டாம் என கோட்டபொழுது அதற்க்கு அவர்களது சாதிபெரை சொவ்லி தாக்க முயற்ச்சித்துள்ளாக கூறப்படுகிறது இதனால் இருதரப்பினருக்குமிடையே மோதல் உருவாகும் சூழல் நிலவியது  பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த செங்கம் காவல் உதவி ஆய்வாளர் விஜயகுமார் தாழ்த்தப்பட்ட மக்களை அடித்து விரட்ட முயன்றதால் மேலும் பதட்டம் நிலவியது பின்னர் இருதரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தி சமரத்தில் ஈடுபட்டனர் இருதரப்பிற்கும் இடையே தகராறு  ஏற்ப்பட்டால் அதனை நேர்மையாக முடித்து வைக்கக்கூடிய காவல்துறை அதிகாரி ஒரு தரப்பினருக்கு மட்டும் சாதகமாக நடந்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்தியுள்ளது .

    செய்தியாளர் திருவண்ணாமலை - வி மூர்த்தி

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad