Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி அருகே சவுடு மணல் அள்ளுவதாக கூறி நடத்தப்பட்ட மணல் குவாரியை முற்றுக்கையிட்ட தேமுதிக, பாமகவின


    தூத்துக்குடிமாவட்டம்   கோவில்பட்டி வைப்பாறு ஆற்றங்கரையின் வடக்குப்புறத்தில் எட்டயபுரம் அருகே கீழ்நாட்டுகுறிச்சியில் உள்ள தனியார் விவசாய நிலத்தில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த செல்வம் என்பவர் சவுடு மண் எடுக்க அனுமதி பெற்று உள்ளார். இந்நிலையில் அரசு விதிமுறைகளை மீறி 3 அடி ஆழத்துக்கு அதிகமாக தோண்டி சுமார் 30 அடி வரை தோண்டி மணல் எடுத்துள்ளதாகவும், இங்கு தினமும் ராட்சத இயந்திரங்களில் மணல் அள்ளி சுமார் 400 டிப்பர் லாரிகளில் எடுத்து செல்லப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. 


    இதுதொடர்பாக பலமுறை புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கப்படாததை கண்டித்து, இன்று பா.ம.க., தே.மு.தி.க கட்சியினர் மணல் குவாரி செயல்பட்ட இடத்துக்கு சென்று முற்றுகையிட்டனர். தே.மு.தி.க. வடக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் அழகர்சாமி,  பா.ம.க மாநில துணை செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில் ஏராளமானோர் திரண்டு மணல் அள்ளப்பட்ட இடத்துக்கு சென்று, மணல் குவாரியை தடை செய்ய வேண்டும். அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்திய தொகையை சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து மீண்டும் வசூலிக்க வேண்டும் என கோஷங்கள் முழங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து எட்டயபுரம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் உறுதியளித்தை தொடர்ந்து போராட்டத்தினை கைவிட்டனர். இதற்கிடையில் போராட்டத்தில் ஈடுபட வந்தவர்களை மணல் அள்ளும் கும்பலை சேர்ந்தவர்கள் உள்ளேவிடமால் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்படும் நிலை உருவானது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.


    செய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad